திருடன் போலீஸ் படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் ராஜூவுடன் அட்டகத்தி தினேஷ்-பாலசரவணன் மீண்டும் கூட்டணி சேர்ந்து நடித்துள்ள படம் ‘உள்குத்து’. ‘அட்டகத்தி’ நந்திதா இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, விட்டல்குமார் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப்படம் தயாராகி ஒரு வருட காலமாகியும், இரண்டு மூன்றுமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அது தள்ளிப்போனன் காரணத்தையும் வரும் டிச-29ல் இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது என்றால் அதற்கு யார் பக்கபலமாக இருக்கிறார்கள் என்பதையும் வேதனையுடன் பகிர்ந்துகொண்டார்.
“இந்த படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கி நான் வெளியிடுகிறேன். அவருடைய சூழ்நிலையால் அவரால் இப்படத்தை வெளியிட முடியவில்லை. அவரது சூழ்நிலை என்னையும் பாதித்ததால், என்னாலும் இந்த ஒரு வருடமாக படத்தை வெளியிட முடியவில்லை. இத்தனையும் தாண்டி இப்போது ‘உள்குத்து’ திரைப்படம் வெளியாவதற்கு முக்கியமான காரணம் கடவுளும், விஷால் சாரும் தான்.
படம் வெளியாகுமா என்ற நிலை இருந்த போது விஷால் சார் தலையிட்டு தன்னுடைய படத்தை போல் நினைத்து இப்படத்தை வெளியிட்டு தந்துள்ளார். உள்குத்து படமானது தற்போதைய நாட்டின் நிலைமையை எடுத்துக்கூறும் படமாக இருக்கும்” என்றார் உள்குத்து படத்தின் தயாரிப்பாளர் விட்டல்குமார்.