விக்ரம் மகன் படம் தொடங்குவது எப்போது..?


தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். இந்த நிலையில், இவருடைய மகன் துருவ்வும், தற்போது ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

தெலுங்கில் விஜய் தேவ்கொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரது நடிப்பில் வந்த வெற்றிப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தை இயக்குனர் பாலா தமிழில் ரீமேக் செய்கிறார். இதில், ஹீரோவாக துருவ் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏற்கனவே வர்மா என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தொடங்கப்படவுள்ளது.

இதற்காக ஹீரோ துருவ்வை இயக்குனர் பாலா தயார் செய்து வருகிறார். மேலும், இப்படத்தில் துருவ்விற்கு ஜோடியாக நடிக்க ஹீரோயினை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் பாலா.

Leave a Response