உதயநிதியின் படங்களுக்கு வரிவிலக்குக் கொடுக்காதது சிறுபிள்ளைத்தனம்.

 

உதயநிதி தயாரிக்கும் படங்கள் அவர் வாங்கி வெளியிடும்படங்கள் ஆகியனவற்றுக்கு சரியான காரணங்கள் இல்லாமல் அவர் திமுககாரர் என்பதை மட்டுமே கணக்கில்கொண்டு வரிவிலக்குக் கொடுக்காமல் இருக்கிறது அதிமுக அரசு.
அண்மையில் வெளியாகியிருக்கும் நண்பேன்டா படத்துக்கும் இதேபோல வரிவிலக்குக் கொடுக்க மறுத்திருக்கிறது அதிமுகஅரசு. அதை எதிர்த்து உதயநிதி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். ஏற்கெனவெ போட்ட வழக்குகள் ஒருபக்கம் இருக்க இது ஒரு புதுவழக்காக இருக்கிறது.
நண்பேன்டா படத்தில் ஆபாசம், வன்முறைக்காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும், ஆங்கிலச்சொற்களை அதிகம் பயன்படுத்தியிருப்பதாகவும் கூறி வரிவிலக்குக் கொடுக்க மறுத்துள்ளதாம் தமிழகஅரசு. படத்தைப் பார்த்த அனைவரும் இது எவ்வளவு தப்பான கருத்து என்பதை உணர்வார்கள். எதிர்க்கட்சிக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே வரிவிலக்குக் கொடுக்க மறுப்பது வெள்ளிடைமலையாகத் தெரிகிறது.
திரைத்துறையினர் யாரும் இதைக் கண்டுகொள்வதே இல்லை. நானும் யாரிடமும் இதுபற்றிச் சொல்லவில்லை என்கிறார் உதயநிதி. எனக்கு ஆதரவாகப் பேசினால் அவர்களுக்கும் சிக்கல் வரும் என்பது தெரியும். மும்பையில் நடந்த பிக்கி நிகழ்வில் கமல்சார் பேசுவதாகச் சொன்னார், நானே அதை மறுத்துவிட்டேன். அவருக்கு ஏற்கெனவே நிறைய சிக்கல்கள் இதில் என்னால் வேறு சிக்கல் வரவேண்டுமா என்பதற்காக வேண்டாமென்று சொல்லிவிட்டேன் என்கிறார் உதயநிதி.
மக்களாட்சி நடக்கும் நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது வெட்கித்தலைகுனியவேண்டிய விசயம். ஆனால் அதுபற்றிய சிறு கவனத்தைக்கூடச் செலுத்த யாரும் தயாராக இல்லை என்பது அதனினும் கொடிது. ஒரு அரசாங்கம் இவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்ள முடியுமா? என்கிற கேள்விகள் எழுகின்றன.
உதயநிதி தயாரிக்கும் திரைப்படங்கள் அவர் வாங்கி வெளியிடும் திரைப்படங்கள் ஆகியனவற்றின் மூலம் நூற்றுக்கணக்கான திரைப்படத்தொழிலாளர் குடும்பங்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுவருகின்றன. அதைக் கணக்கில் கொண்டாவது அரசாங்கம் நடந்துகொள்ளவேண்டும் நடுநிலையாளர்கள் சொல்கின்றனர்.

இது தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் வெளியிட்டுள்ள கருத்து….

தமிழில் தலைப்பு வைத்தால் வரி விலக்கு என்பதை தமிழக அரசு ஒரு திட்டமாக அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறது திரு.உதயா அவர்கள் நடித்திருக்கும் நண்பேண்டா திரைப்படம் வரி விலக்கிற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தும் அவரின் படத்திற்கு வரி விலக்கு சான்றிதழ் கொடுக்காமல் இருப்பது அதிமுக அரசின் பழி வாங்கும் போக்கையே காட்டுகிறது …

ஆட்சி அதிகாரத்திற்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பாரபட்சத்தை படைப்பாளிகளிடமும் திரைப்பட கலைஞர்களிடமும் அதிமுக காட்டுவது அவர்களின் சிறுபிள்ளைத்தனமான செயலாகவே படுகிறது …

ஆகவே ஆளும் அதிமுக அரசு மற்ற கலைஞர்களை போலவே திரு.உதயாவையும் நடத்த வேண்டும் அவரை முடக்குவதன் மூலம் அவரால் வேலைக்கிடைக்க பெறும் திரைப்பட தொழிலார்களின் வயிறுகள் காயும் என்பதை ஒரு படைப்பாளியாக எடுத்துரைக்க கடமை பட்டுள்ளேன் ….

சிபிசந்தர்
திரைப்பட இயக்குனர்

கருத்தியல் பரப்பு மாநில துணைச்செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி …

Leave a Response