திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்துவரும் சமந்தா..!


சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் சீம ராஜா என்று விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் ராம் சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் ரங்கஸ்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

1980ம் ஆண்டுகளில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைக்காக பாவாடை தாவணில் நடித்து வருகிறார் சமந்தா.

Leave a Response