
புதுமுகங்களான கிரண், அர்பிதா நாயகன் நாயகியாக நடிக்க முக்கியவேடமொன்றில் கிஷோர் நடிக்கும் கைபேசி காதல் படத்தை இயக்குபவர் திம்மம்பள்ளிசந்திரா. இவர்கள் எல்லோரும் கன்னடர்கள். யாருக்கும் தமிழை முழுமையாகப் பேசத்தெரியவில்லை. ஆனால் தமிழில் படமெடுத்திருக்கிறார்கள். மார்ச் 28 அன்று இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், வி.சி.குகநாதன், பேரரசு திரையரங்குஉரிமையாளர் அபிராமிராமநாதன், சண்டைப்பயிற்சிஇயக்குநர் ஜாக்குவார்தங்கம், பத்திரிகைத்தொர்பாளர்கள்சங்கத்தலைவர் விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய படத்தின் இயக்குநர், நாங்கள் புதியவர்கள் ஆனால் இங்கு தமிழ்த்திரையுலகிள் பல ஜாம்பவான்கள் கலந்துகொண்டு எங்களை வாழ்த்த வந்திருக்கிறார்கள். இதுபோன்ற எந்த இன்டஸ்ட்ரியிலும் நடக்காது. இங்குமட்டும்தான் இப்படி நடக்கிறது. இவர்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன்.
செல்போன், வீடு, கார் போன்ற வசதிகள் இல்லாதவர்களிடம் மற்றவர்கள் பேசுவது கூட இல்லை. உலகமே இப்படி வசதிவாய்ப்புகளைத் துரத்திக்கொண்டு போகிறது. இது சரியல்ல என்கிற கருத்தைச் சொல்கிற விதமாக இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம் பல புதியமுயற்சிகளுக்கு வரவேற்பு கொடுப்பதில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பது தமிழ்த்திரையுலகம்தான் எனவே எங்களையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம் என்கிறார் இயக்குநர்.

படத்தின் நாயகன் கிரண், ஒரு கைபேசியை கைபேசி என்பதற்கும் மேலாக நேசிக்கிறார். அதனாலேயே பல சிக்கல்கள் வருகின்றனவாம். இதை வைத்துக்கொண்டு சுவாரஸ்மாக இந்தப்படத்தை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
விழாவில் பேசிய ஜாக்குவார்தங்கம், வி.சி.குகநாதன், எஸ்,பி.முத்துராமன் ஆகியோர் நாம் பெருந்தன்மையோடு கன்னடர்கள் என்று பாராமல் கலைஞர்கள் என்று மதித்து இவர்களை வாழ்த்துகிறோம். நம்முடைய பெருந்தன்மையைப் புரிந்துகொண்டு இவர்கள் அங்கேபோய் காவிரியில் அணைகட்டுவது தவறு என்று சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
த.சக்திவேல் தயாரித்திருக்கும் இந்தப்படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருக்கிறது.
