“இவன் வேற மாதிரி போலீஸ்” ; உறுமுகிறார் கார்த்தி..!


சதுரங்க வேட்டை’ இயக்குனர் வினோத் டைரக்சனில் தீரன் ; அதிகாரம் ஒன்று என்கிற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.. ஆக்சன் கதையாக உருவாகும் இந்தப்படத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் போலீஸ் யூனிபார்ம் அணிந்துள்ளார் கார்த்தி. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.

நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும் தான் மொத்த காவல் துறை நினைக்கிறோம். அது தவறு என இந்தப்படத்தில் காட்டியுள்ளார்களாம். இதுபற்றி நடிகர் கார்த்தியே அழகாக விளக்குகிறார்..

“நாம் அனைவரும் 8 மணி நேரம் வேலை செய்ய சம்பளம் வாங்குகிறோம். ஆனால் போலீஸ் அதிகாரிகள் ஒரு நாளைக்கு 22மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது. நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு மொத்த காவல்துறையும் இப்படி தான் என்று கூறுவது தவறு. மற்ற மாநில போலீஸ் அதிகாரிகளை விட தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரிகள் மேல் அனைவருக்கும் பயம் உண்டு.

போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையாக தீரன் கதை நாம் சொல்கிறோம். தீரன்-னின் வாழ்க்கையை மாற்றிய ஒரு கேஸ் தான் இந்த படத்தின் கதை. நான் நடித்த கதாபத்திரங்களிலேயே எனக்கு ‘நான் மகான் அல்ல’ படத்தில் நான் செய்த கதாபாத்திரம் தான் மிகவும் பிடிக்கும். என்னென்றால் நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ அப்படியே அந்த படத்தில் இருப்பேன்.

தீரன் வீட்டில் இருக்கும் போது ‘நான் மகான் அல்ல’ படத்தில் வருவது போல ஒரு பையனாக இருப்பான். போலீசாக ஸ்டேஷனில் இருக்கும் போது வேறு ஒரு விதமாக இருப்பான். மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக பேசுவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன்.

ராஜஸ்தான் மாதிரியான ஒரு நீண்ட மணல் பரப்புள்ள இடத்தில் நாம் ஒளிந்திருந்து எதிரிகளை பிடிக்க முடியாது. மண்னுக்குள் மறைந்து தான் பிடிக்க முடியும் அதனால் தான் ட்ரைலரில் அப்படி ஒரு காட்சி இடம்பெற்றது. அது கிராபிக்ஸ் அல்ல நிஜம் தான்” என்கிறார் கார்த்தி.

Leave a Response