திட்டமிட்டே தரமிழக்கச் செய்யப்படும் யாழ் மருத்துவமனை – ஈழத்தமிழர்கள் வேதனை

யாழ் போதனா மருத்துவமனையில் தொடர்ச்சியாக ஏற்படும் மரணங்கள் தொடர்பாக மக்கள் விழிப்படைய வேண்டும் அதற்கு உடன் தீர்வு காணப்பட வேண்டிய அவதி நிலைக்குரிய விடையமாகும்.

தனியார் மருத்துவமனை பக்கம் நோயாளர்களை திசை திருப்பி அவர்களின் வருவாயை உயர்த்துவதற்காக அரச வைத்தியசாலைகளை தரமிழக்கச் செய்யப்படும் பொறிமுறை உலகமயமாதலின் கருவூலமாகும்.

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாய் பிறக்கும் குழந்தைகள் நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைவதுபற்றி அண்மைக் காலமாகபெரும் சர்ச்சை நிலவுகின்றது இதற்கு காரணம் சரியான தொற்றுநோய் தொடர்பான முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாமையே காரணமாகும் அதற்கு உதாரணமாக சுவாசநோய் சிகிச்சைப் பிரிவிற்கு மிக அருகில் பச்சிளங்குழந்தைகளை பராமரிக்கும் இடமான பேபிறும் அமைந்திருக்கின்றது.

புதிதாய் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களின் பாலூட்டும் செயற்பாடும் ஒரே இடத்தில் நிகழ்கின்றன சுவாச நோய் சிகிச்சைப் பிரிவில் சுவாச நோய் தொடர்பான பரிசோதனைகளுக்கு வரும் நோயாளர்கள் ஆஸ்த்துமா நாட்பட்ட சுவாச நோயாளர் ஆவார்கள் இவாகள் கிருமித் தொற்றுடன் கூடியவர்கள் இவர்கள் சுவாசித்த காற்றையே பச்சிழம் குழந்தைகளும் சுவாசிக்க நேர்கின்றது சுவாசம் தொடர்பான நோய்கள் காற்றின் மூலமாகவே பரவுகின்றது என்பது அனைவருக்கும் தெரியும் இது சிந்திக்க வேண்டிய விடையம்.

பெண் நோயியலுக்காக சிகிச்சைபெறும் நோயாளர்களும் மகப்பேற்றுக்கு வரும் தாய்மாரும் அவர்தம் குழந்தைகளும் ஒரே விடுதியில் சிகிச்சைக்காக தங்கவைக்கப்படுவதால் இலகுவில் நோய் தொற்று ஏற்படும் ஏதுநிலை காணப்படுகின்றது இது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயம்.

அதி தீவிர சிகிச்சை பிரிவில் ஒரே இடத்தில் தொற்றும் தொற்றா பல்லின நோய்களுக்கு ஒரே இடத்தில் சிகிச்சையழிக்கப்படுவது வியந்து பாராட்டுவதற்கல்ல மனம் வருந்துவதற்கே வழிகோலும்
மருத்தவ சிகிச்சை சார் அதி தீவிர சிகிச்சைக்குரியவர்களும் சத்திர சிகிச்சைக்குட்படுத்தியவர்களும் பெண்நோயியல் சிகிச்சை என பலபிரிவும் நோய் தொற்றை தமக்குள் மறிமாறிப் பெற்றுக்கொள்கின்றனர் இதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை எந்த அதிகாரியைச் சாரும் என்பது யாவரும் அறிற்த உண்மை.

மரங்களைச் சுற்றி இருக்கை கட்டுவதும் மதிலை உயர்த்திக் கட்டவதும் நிலத்திற்கு கல்லுப் பதிப்பதும் சுவருக்கு வர்ணம் பூசுவதும் பெயர்பலகை வைப்பதும் கார்களுகளுக்கு கொட்டகை அமைப்பதும் மக்களை கவரும் பொறிமுறை எனினும் கவரப்படும் மக்கள் ஏமாற்றப்படும் நிலை கடும் வேதனைக்குரியதாகும்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நாசுக்கான நாசகார திட்டத்தை மெல்ல மெல்ல அரங்கேறுவது இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும் இதற்கு சத்யத்திற்கு கட்டுப்பட்ட அம்புலன்ஸ் வைத்தியரே எதிர்காலத்தில் பொறுப்புக் கூறவேண்டியவர் ஆவார்.

நன்றி- முழக்கம்

Leave a Response