
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வெற்றியாளர் யார்? என்பது இப்போதைய எதிர்பார்ப்பு.இதுபற்றி இந்நிகழ்ச்சியைத் தொடக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் பெண் ஒருவரின் கருத்து….
விடாமல் நானும், ஒஜுவும் பிக்பாஸ் பார்த்து வருகிறோம். டேய் story time போயிடுச்சுடா என்றதற்கு அம்மா இது நிஜ மனிதர்களின் கதை இதுவும் கதைதான் என்று வாயை அடைத்து விட்டான். அடுத்த பிக்பாஸ் உறங்கும் நேரத்தில் வந்தால் ஆரம்பத்திலேயே தவிர்ப்பதாய் எண்ணம் இருக்கு.
ஒஜுக்கு சினேகனும், எனக்கு ஆரவும், தரனுக்கு கணேஷும் மூன்று கட்சியாக இருக்கிறோம். பிந்து நூறு நாள் முடித்து இருந்தால் அவருக்குத்தான் பரிசு போகும். பிந்து மட்டுமே எல்லா விகிதத்திலும் சரி.
இளம் வயதில் இருப்பதால், அதும் தமிழ்நாடு ஆதலால் ஹரிஷுக்கு நிறைய காண்டாக்ட்ஸ் இருக்குமென தோன்றுகிறது. வோட்டு அள்ளுகிறார். பட் இங்கு மூன்று பேருக்குதான் கடும் போட்டி.
சினேகன் சமையல் செய்து, துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி, டாஸ்க் விட்டுக் கொடுக்காமல் விளையாடி சிறந்த போட்டியாளர்.ஆனால் கமலுக்கு ஐஸ் வைப்பது, புறம் பேசுவது, கூடுதலாய் செண்டி சீன்கள் போடுவது என்று ஒரு புறம், ஓவியாக்கு முன் இருந்த கம்பீரம் போய் ..தலைய சாய்த்துக்கொண்டு ஒரு வித்தியாச ஃபீல் கொடுப்பது என்று தடுமாறுகிறார். பேச்சில் இருக்கும் தெளிவு முகத்தில் சுத்தமாய் இல்லை. ஓவியாக்கு வருந்தி சினேகன் இப்படி ஆகிவிட்டார் அதற்காகவே ஓட்டுப்போடலாம் என்பது ஒஜு வாதம். பட் பிக்பாஸில் ஜெயிக்க ஒரு கம்பீரம் தேவை. அது எங்கயோ தவற விட்டதாக மனதுக்கு படுகிறது.
அடுத்து கணேஷ். மிக மனிதத் தன்மை உடையவர், மாடர்ன் ஆண். ரேமண்ட்ஸ் விளம்பர ஆண் போல ‘complete man’ ஆக பல சமயங்களில் இருந்தாலும், பல இடங்களில் முகப்பாவத்தில் அசட்டை இருக்கிறது. தியானம், உடல் நலம், உதவி என்று இருந்தாலும் பரணி, ஓவியா விஷயததில் எந்த முடிவும் எடுக்கவில்லை. நடுத்தரமாக இருப்பவர்களை உலகம் நம்புவதில்லை. ஒரு ஆணின் கம்பிரம் சரியோ, தவறோ ஒரு முடிவு எடுத்து உடனடியாக செயல்படணும். அந்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டார். இல்லாவிடில் இவரை கண் மூடிக்கொண்டு ஜெயிக்க வைத்து இருக்கலாம்.
அடுத்து ஆரவ். ஆரம்பத்தில் இருந்தே பெண்களை வசிகரீக்கும் வித்தை தெரிந்தவர். ரைசா, பிந்து, ஜூலி, காயத்திரி, நமீதா ஏன் காஜல் வரை அன்பாக அதிகம் குறை சொல்லாமல் நட்புடன் இருந்த ஆண். ஒவியா தனிமையில் இருந்த பொழுது கிடைத்த ஒரே ஆறுதல். கமிட்மெண்ட் இல்லாமல் நூறு நாள் பழகலாம் என்று தப்புக் கணக்கு போட்டு மாட்டிக் கொண்டவர். அதிகம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கார்னர் செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டவர். மருத்துவ முத்தம், குறும்படம் என அதிக அவமானத்திற்கு ஆளாகி மன்னிப்பு கேட்கும் சூழலுக்கு ஆளாக்கப்பட்டவர். பட் ஃபினிக்ஸ் போல ஒவ்வொரு பிரச்சினையிலும் மீண்டு உறுதியாக வருவது மட்டுமின்றி ஒவியாவை எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை. அவரால் மக்கள் எதிர்ப்பை சம்பாதித்தும் தன் நிலையை எங்கும் நியாயபடுத்திக் கொள்ள முயலவில்லை. அனைவரிடமும் அன்பு பாராட்டும் பழக்கமும் உள்ளது. சினேகன் அவரை நாமினேஷன் செய்து விட்டு அவர் தன் பற்றி அதிகம் பேசல என்றதத்கு sportive ஆக எடுத்துக்கொண்டு LKG கத சொல்லி கலாய்த்தார். அதுவே ரைசா,காயத்திரி ஒருவ ர்க்கு ஒருவர் நாமினேட் விஷயத்தில் பகையாக ஆனது. வெளியே சென்றவர்களுக்கு சினேகன் மீதும், கணேஷ் மீது கூட வருத்தங்கள் உண்டு ஆரவ் மேல் இல்லை. போட்டிக்காக இன்றி இயல்பில் உறுதியான ஒருவர். அவர் ஜெயிப்பதே நியாயமும்.
– கிருத்திகாதரன், பெங்களூரு


