கடந்த சில தினங்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கு, போராட்ட நாள்களுக்கு சம்பளம் தரமாட்டோம் தமிழக அரசு தெரிவித்தது. நீதிமன்றமும், தடையை மீறி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துவது குறித்து தனது கண்டனத்தைப் பதிவுசெய்தது.
இந்நிலையில், சமீபகாலமாக அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் காட்டமாக பேசிவரும் நடிகர் கமல்ஹாசன் “வேலை செய்யாவிட்டால் சம்பளம் இல்லை என்பது அரசு ஊழியருக்கு மட்டும்தானா? ரிசார்ட்டில் தங்கி குதிரை பேரம் நடத்தும் அரசியல்வாதிகளுக்குப் பொருந்தாதா? போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை நீதிமன்றம் எச்சரித்துள்ளது போலவே, ரிசார்ட்டில் தங்கி வேலை செய்ய மறுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும் எச்சரிக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.. அவர் சொல்வதும் நியாயம் தானே.. அவர்களும் அரசு ஊழியர்கள் தானே..?


