நீட் தேர்வு தரமானதல்ல – ஆங்கிலப் பத்திரிகையின் தலையங்கம்


NEET மற்றுமொரு விளக்கம் :
நாம் சொன்னாலோ அல்லது தமிழ் ஊடகங்கள் சொன்னாலோ , இவர்களுக்கு என்ன தெரியும் என்பார்கள் ஆதலால் , தேசிய ஆங்கில பத்திரிகையின் தலையங்கத்தில் வந்தவற்றை இங்கு பதிவிடுகிறேன். Business Standard பத்திரிகையின் தலையங்கம் சொல்கிறது. NEET போன்று ஒரு தேசிய அளவில் தேர்வை முன்னேறிய நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வைத்திருந்தாலும் , இந்தியாவில் இது பல அம்சங்களில் சறுக்கிவிட்டது.
1.cbse பாடதிட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது தவறு.
2. ஆங்கில மொழி கேள்வித்தாள் , மாநில மொழி கேள்வித்தாளைவிட எளிதாக அமைக்கப்பட்டது தவறு.
3. மாநில கல்வி அமைப்புகள் அளவில் மிகப்பெரியவை. அவற்றை குறைத்து மதிப்பிட்டது தவறு.
4. Cbse பாடத்திட்டத்தின் அறிவியல் பகுதி சிறப்பானது அல்ல என்ற போதும் அதை சார்ந்து கேள்வித்தாளை அமைத்தது தவறு.
5. மேம்பட்ட வகுப்பினருக்கு ஒரு திட்டம் போன்ற ஒரு அம்சத்தை கொண்டுள்ளது ( அதாவது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது) தவறு.
ஆதலால் , தரத்தை உயர்த்துவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் , தரம் தாழ்ந்து விட்டது என முடிக்கிறது அந்த தலையங்கம் .
மாணவர்களே , உங்கள் போராட்டம் நியாயமானது . உண்மை வெல்லும் . ஆட்சியாளர்கள் தவறிழைத்து தங்கள் கடமையிலிருந்து விலகும்போது புரட்சி வெடிக்கும்.
வாய்மையே வெல்லும்
நன்றி
சரவணராஜா
9-9-17

Leave a Response