போகும்போதும் ஓவியா மீது குற்றம் சொல்வதா? – சக்தி மீது பாயும் ஓவியா ரசிகர்கள்

பிக் பாஸ் வீட்டில் ‘சக்தி’யின் வெளியேற்றம் நிகழ்ந்துவிட்டது.

அவர் கிளம்புகிற நேரத்தில், இந்த வீட்டில் துவக்கத்திலிருந்தே உங்களுக்கு பிடிக்காத நபராக இருந்தவர் எவரென்று சொல்ல முடியுமா?’ என்று கேட்டார் கமல். அதற்கு சக்தி ‘ஓவியாவைச் சொல்வேன். அவர் செய்த சில விஷயங்கள் பிடிக்கவில்லை. ‘அடிச்சிடுவியா’ என்பது மாதிரியே பக்கத்தில் வந்து நின்னாங்க’ என்றார்.

பொதுவெளில் ஓர் ஆண் தன்னை அடிக்க வருவதாகச் சொன்னால் சுயமரியாதையும் துணிச்சலும் உள்ள பெண், ஓவியா போலத்தான் எதிர்வினை செய்ய முடியும், என்பதை அவர் உணர்ந்ததாகவே தெரியவில்லை.

மொத்த வீடியோக்களையும் பார்த்த பிறகு சக்தி இதை உணர்வார் என நம்புவோம். அல்லது அவருடைய சுற்றத்தாராவது அவருக்கு இதை உணர்த்த வேண்டும். காயத்ரியைப் போலவே சில விஷயங்களில் தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் குணம் சக்திக்கு இருக்கிறது.

‘அவங்க என்னை ட்ரிக்கர் பண்ணிட்டே இருந்தாங்க’ என்று சொல்லி சக்தி மாட்டிக் கொண்டார். சபையினரிடமிருந்து ஆரவாரம் எழுந்தது. அவர்கள் தன்னைப் பாராட்டுகிறார்கள் போல என தவறாக நினைத்துக் கொண்ட சக்தி மேலும் உற்சாகமாகப் பேச முயல, இடைமறித்த கமல் ‘நீங்க வெளியே போனவுடன் இதைப் புரிந்து கொள்வீர்கள்’ என்றார். பிறகுதான் சக்திக்கு புரிந்தது, இந்த வார்த்தையுடன் இணைத்து தன்னைக் கலாய்த்திருக்கிறார்கள் என்பது. எப்படியிருந்தாலும் போகும்போதும் ஓவியா பற்றி தவறான புரிதலுடனே சக்தி போனது ஓவியா ரசிகர்களுக்குக் கொலைவெறியை உண்டாக்கிவிட்டது.

Leave a Response