
அனைத்து விதமான சமூகவலைத்தளங்களிலிருந்தும் வெளியேறுவதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது இயங்கி வந்தார் சிம்பு. தன்னுடைய படங்கள் வெளியாகும் போதும் மற்றும் சக நடிகர்கள் படங்களின் ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டார் சிம்பு.
தற்போது அனைத்து விதமான சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறுவதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து சிம்பு கூறியிருப்பதாவது:
எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் எதிர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் ஒரு பங்கு வகிக்க எனக்கு பயமாக இருக்கிறது.
ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். ஆனால் நான் என் மனம் சொல்வதை கேட்கிறேன். நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள்
சுதந்திர தின வாழ்த்துகள்
இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.


