
ஓவியா போன பிறகு ஹேரு மாதிரி இருக்கு பிக்பாஸ். ஸாரி, மன்னிக்கவும். காயத்ரியின் பேச்சைக் கேட்டுக் கேட்டு இப்போதெல்லாம் அடிக்கடி ஹேருன்னு யூஸ் பண்றேன். சாப்பிட வர்றீங்களான்னு ஃப்ரெண்ட் கேட்டாரு. பிக் பாஸ் தாக்கத்துல போய்யா ஹேருன்னுட்டேன்.
பிக் பாஸ் வீட்டில் நூறு நாள் தங்கி வெல்வது வையாபுரி என்றே நினைக்கிறேன். ஓவியாவுக்கு அடுத்தபடியாக அவர்தான் அந்த வீட்டில் மனித இனத்தைச் சேர்ந்தவர் போல் இருந்தார், இருக்கிறார்.
முதல்முறையாக கமல் ஹேட்டர்ஸ் கமலை விரும்ப ஆரம்பித்துள்ளனர். இது அடியேனுக்கும் பொருந்தும். என்னைத் திட்டியர்கள் கூட இப்போது பாராட்டுகிறார்கள். ஆனால் பாராட்டியவர்கள் திட்டுகிறார்கள். அந்தப் பிரச்சினை கமலுக்கு இல்லை.
இதுவரை ஜூலியின் டபுள் மாதிரி இருந்த ரைஸா இப்போது ஓவியா மாதிரி ஆகி விட்டார். அடப் பாவி.
டேய் என்னாங்கடா இது, இப்படி எப்போப் பார்த்தாலும் பன்னி மாதிரி தின்னுக்கிட்டே இருக்கான். யார்ரா இவனை இப்படி ஒரு சமூக விரோதியா வளர்த்தது. யோகா பண்றான். தின்றான். யோகா பண்றான். தின்றான். நல்ல வேளை, நான் உள்ளே இல்லை. இருந்திருந்தா அடிதடிதான். நான் தான் நிறைய அடி வாங்குவேன். ஆனாலும் அந்தத் தடியனை ஒரே ஒரு அறையாவது விட்ருவேன். கொடுமைடா சாமி. இப்படியும் ஒரு ஜென்மமா!
– சாருநிவேதிதா


