அடப்பாவி நீயா..? ; ஆனந்தராஜை அதிரவைத்த இயக்குனர்..!


வெண்ணிலா கபடி குழு படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் தான் ‘கதாநாயகன்’.. கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடிக்க, சூரி சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.. இந்தப்படத்தை முருகானந்தம் என்பவர் இயக்கியுள்ளார். இவக்ர் சில மாதங்களுக்கு முன் வெளியான மரகத நாணயம் படத்தில் ஆனந்தராஜின் கையாட்களில் ஒருவராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்தப்படத்திற்காக ஆனந்த்ராஜிடம் கதை சொல்லி கால்ஷீட் வாங்க அவரது வீட்டுக்கு சென்றாராம் முருகானந்தம். கம்பெனியில் இருந்து யாரோ ஒரு இயக்குனர் கதை சொல்ல வருகிறார் என தயாராக இருந்த ஆனந்தராஜுக்கு, தன்னுடன் நடித்த முருகானந்தம் தான் தனக்கு கதை சொல்லவந்துள்ள இயக்குனர் என தெரிந்ததும் ஆச்சர்யமாகி போனாராம்..

“அடப்பாவி நீயா.. மரகத நாணயம் படத்துல நடிக்கிறப்ப கூட இப்படி டைரக்சன் பண்ணப்போறேன்னு சொல்லலியேப்பா” என செல்லமாக இயக்குனரை கோபித்துக்கொன்டாராம். தனது கேரக்டர் பற்றி சொல்லும்போது, “இப்படத்தில் முதன் முறையாக ஷேக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் எனது கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்துள்ளார் என கூறியுள்ளார் ஆனந்தராஜ்.

Leave a Response