முரசொலி பவளவிழாவுக்கு தமிழின எதிரிகளை அழைப்பதா? – சீறும் பத்திரிகையாளர்


முரசொலி விழ அழைப்பிதழ் கண்டேன். ஒரு வருடத்திற்கு எழுதலாம் போன்ற கண்ணீர் கதை. அங்கு அழைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தலைமை ஊடகவியலாளர்கள் குறித்தும் ஏகப்பட்டது பேசலாம். கருணாநிதி கையெழுத்துப் பிரதியாக திராவிடர் கருத்து பரவ ஆரம்பித்து வைத்த ஊடகத்தின் சிறப்பான நாளில் அழைத்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்களில் விடுபட்டவர்கள் / அவர்களே தங்களை விடுவித்துக் கொண்ட பிராமன சாதிய மானச்தர்கள் அனேகமாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்கியும், ஆர் எசு எசு ஆர்கனைசர் இதழின ஆசிரியரும், சமீபத்தில் கூட பன்றிக்குப் பூணூல் குறித்து கொதித்தெழுந்த ராசாசியின் நினைவு போற்ற மீண்டு வந்து சாதியை தூக்கி பிடித்த ஒரு தேசிய இந்து பார்வை கொண்ட மின்னிதழின் ஆசிரியர் பெயர்கள் மட்டுமே அழைப்பிதழில் பெயர் இல்லாமல் இருக்கும் என்று தோன்றுகிறது. எது எப்படி இருப்பினும் இதையும் தெரிந்து கொள்வோம். அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் / ஊடக முதலாளிகள் இருவர் தவிர்த்து ஏனையோர் தமிழரல்லாதோர். முல்லைப்பெரியாரை முல்லபெரியார் என எழுதிய டைம்சு ஆப் இந்தியா நாளிதழ் ஆசிரியர் குழுமத்தை சேர்ந்த ஆசிரியரையும், இனப்படுகொலை அரசாங்கமான சிங்கள இனவெறி அரசை தாங்கி பிடித்து, இலங்கையில் தமிழர்கள் கொள்ளப்படவில்லை என சொன்ன சிங்கள ரத்னா விருது பெற்று, திராவிட இயக்கத்திற்கும் மக்களுக்கும் எதிரான சாதிய கருத்துக் கொண்ட இந்திய தேசியம் பேசும், பார்ப்பனியனை நீதிபதியாக்க மறுத்ததால் அதனை ஆங்கில அரசாங்கத்திடம் கேட்டு பெறவே ஆரம்பிக்கப்பட்ட இதழான தி இந்துவின் என் ராமும் சிறப்பு அமைப்பாளர்களாக நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பதை என்னென்பது? எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என நிச்சயம் திராவிட கொள்கை முன்னோடிகள் இதனை விளித்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

-ராதிகாசுதாகர்

Leave a Response