
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்குத் தான் ஏராளமான ரசிகர்கள், ஏன் ஒட்டு மொத்த தமிழ்நாடே ஓவியாவின் ரசிகர்களாகி விட்டார்கள் என்று கூடச் சொல்லலாம்.
ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஆரவ் விடம் ஒரு ஆண் மகன் எப்படி இருக்கணும் என அவரது கருத்தைக் கூறியிருந்தார்.
அப்போது அவர் கூறியதாவது, துணிச்சல் இருக்கணும், தைரியம் இருக்கணும், உண்மையை மறைக்காம தைரியமா சொல்லணும், யாரையும் துன்புறுத்தக் கூடாது என கூறியிருந்தார்.
மேலும் தான் 25 வருடமாக தேடிய ஆணைப் பார்த்து விட்டதாகவும் ஆராவை பார்த்துக் கூறினார்.
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு தினம்தோறும் எதாவது ஒரு டாஸ்க் கொடுத்து,தோற்பவர்களுக்கு எதாவது தண்டனை கொடுப்பார்கள்.
நேற்று ஜூலியை வீட்டிற்கு உள்ளே விடாமல் வெளியே உட்காரவைத்துவிட்டனர்.
இதனால், இன்று ஜூலியை நடுவராக்கி பார்த்துள்ளது பிக்பாஸ்.
அதாவது, இரு டீம்களுக்கு சமைக்கும் போட்டி வைக்கப்பட்டு, தோற்கும் அணியில் இருப்பவர்கள் ஜூலிக்கு பணிவிடை செய்யவேண்டும் என்பதே இதன் தீர்ப்பு.
இந்நிலையில், ஓவியா அணி தோற்றதால், ஜூலிக்கு பணிவிடை செய்யும் பட்டியலில், ஜூலியின் கால் தரையில் படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் எனவும், அதற்காக அவர் எங்கு சென்றாலும் ரெட் கார்பெட் விரித்து அதன் மேல் நடக்கவைத்து அழைத்துச் செல்ல வேண்டும்.
அந்தப் பணியானது இளைஞர்களின் நாயகியான ஓவியாவிடம் கொடுக்கப்பட்டது. அதன்படி ஓவியாவும் ஜூலியை கீழே நடக்கவிடாமல் ரெட்கார்பெட்டை விரித்து அழைத்துச் சென்றார்.
அப்போது, ஜூலி நடக்கும்போது கார்பெட்டை இழுத்துவிட்டார் ஓவியா, அதனால் ஜூலி கீழே விழுந்தார்.
இதன்விளைவு, ஓவியாவிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்றும் ஓவியா மீது தவறில்லை என்றும் பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்கிறது.


