நாச்சியார் படப்பிடிப்பை முடித்தார் ஜி.வி.பிரகாஷ்..!


விளையாட்டு பிள்ளையாக படங்களில் நடித்துக்கொண்டிருந்த பல நடிகர்களுக்கு தாங்கள் இதுவரை நடித்துக்கொண்டிருப்பது நடிப்பே அல்ல என்பது இயக்குனர் பாலா என்கிற பாசறைக்குள் சென்றுவந்தபின் தான் தெரிய வந்திருக்கும்.. அதன்பின் அவர்களது நடிப்பு, உடல்மொழி என அனைத்திலும் ஒரு மெச்சூரிட்டி உருவாகிவிடுவதையும் கண்கூடாக பார்க்கமுடியும்.. பார்த்தும் வருகிறோம்..

விடலைப்பையன் போல சிலுப்பிக்கொண்டு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதைகளில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷுக்கு பாலாவின் டைரக்சனில் ‘நாச்சியார்’ படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததும், அதில் நடிக்க அவர் உடனே ஒப்புக்கொண்டதும், ஜி.வியின் திரையுலக வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கான நகர்வு என்பதில் ஐயமில்லை..

கூடவே ஜோதிகாவும் நடித்திருப்பது இந்தப்படத்திற்கு இன்னும் பலம். தற்போது இந்தப்படத்தில் தான் சம்பந்தப்பட்ட போர்ஷனை நடித்து முடித்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ்.. இத்தனை நாட்களில் இயக்குனர் பாலாவுடனான பயணம் ஜி.வி.யிடம் நிச்சயம் புதிய மாற்றங்களை கொண்டு வரும் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.

Leave a Response