ரஜினி நடித்த பில்லா’ படம் சூப்பர் ஹிட்டானது வரலாறு, அதன்பின் பல வருடங்கள் கழித்து அந்தப்படத்தை அஜித்தை வைத்து அதே பில்லா’ என்கிற பெயரில் ரீமேக் செய்து, அதுவும் ஹிட்டானது. அனால் அதே சமயம் அதே அஜித்தை வைத்து எடுக்கப்பட்ட ‘பில்லா-2’ பிளாப் ஆனது.
இப்போது பில்லா படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க இருக்கிறார்களாம்.. இந்தப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.. ஆனால் பில்லாவாக நடிக்க இருப்பவர் யார் தெரியுமா.. அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என பெயரெடுத்த சிம்பு தானாம்.. இதற்கு ரஜினி, அஜித் ரசிகர்களின் ஆதரவு இருக்குமா..? இல்லை எதிர்ப்பு இருக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.