“என் மகளுக்கு மொழி பேதம் இல்லை” ; சொல்கிறார் ஸ்ரீதேவி


‘புலி’ படத்தை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகை ஸ்ரீதேவி இப்போது ‘மாம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தைப்போல இதில் இன்னொரு விதமான அம்மாவாக பரிமாணம் எடுத்துள்ளார்.. ரவி இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்..

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஸ்ரீதேவியிடம் தொடர்ந்து தமிழில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு அதற்கு என்ன தடை இருக்கிறது.. நிச்சயம் நடிப்பேன் என்று கூறினார். அதேபோல அவரது மகளை இந்தியில் தான் அறிமுகப்படுத்துவாரா இல்லை தமிழில் அறிமுகப்படுத்துவாரா என கேட்டதற்கு என் மகல் சினிமாவில் அறிமுகமாவதற்கு மொழி பேதமெல்லாம் இல்லை.. அங்கே வாய்ப்பு அமைகிறதோ அங்கே அறிமுகமாவார்” என பதிலளித்தார் ஸ்ரீதேவி.

Leave a Response