உதயநிதியின் புதிய படம் ‘இப்படை வெல்லும்’..!


தூங்கா நகரம், சிகரம் தொடு படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மற்றுமொரு படத்தின் படப்பிடிப்பும் கூட முடிவடைந்து விட்டது.. இப்போது அந்தப்படத்தின் டப்பிங் பணியில் வேகம் காட்டி வருகிறார் உதயநிதி.. இந்தப்படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.

தொடர் வெற்றி படங்களைத் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது. இதுநாள் வரை பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடைபெற்றுவந்த இந்தப்படத்திற்கு தற்போது ‘இப்படை வெல்லும்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.

Leave a Response