
விஷ்ணு தற்போது நடித்துவரும் கதாநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளதாம். முருகானந்தம் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்..
இதை தொடர்ந்து படத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் உள்ள முக்கியமான வாய்ஸ் ஓவருக்கு நடிகர் சிம்பு குரல் கொடுத்துள்ளாராம். இதை விஷ்ணுவே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். சிம்பு, தனுஷ் இருவரும் சக நடிகரான விஷ்ணுவின் படத்தை இந்த அளவுக்கு ஆர்வமாக புரமோட் பண்ணுவது ஆரோக்கியமான விஷயம் தான்.


