பிரபுதேவாவுக்கு வில்லனாக மாறிய காளகேயர் தலைவன்..!


பிரபுதேவா கதாநாயகனாக நடித்துவரும் படம் பெயர் ‘யங் மங் சங்’.. இந்தப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார் லட்சுமி மேனன். முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜூன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவருக்கு வில்லனாக நடிப்பவர் ‘பாகுபலி’ படத்தில் காளகேயர் தலைவனாக அசத்திய பிரபாகர் தான்.

இந்தப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக நடித்துள்ள பிரபுதேவா, இந்தப்படத்திற்காக குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சிகளை கற்றுகொன்டாராம். கிட்டத்தட்ட எண்பதுகளில் வெளியான மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் போல இது உருவாகிறதாம். இந்தப்படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்க, ஆர்ஜே பாலாஜி மற்றும் இயக்குனர் தங்கர் பச்சானும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

Leave a Response