விஷாலின் முடிவை எதிர்த்து திருப்பூர் சுப்பிரமணி அதிரடி அறிவிப்பு..!


தமிழ் திரையுலகம் சம்பந்தப்பட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வரும் மே-3௦ முதல் போராட்டத்தில் திரையுலகம் இறங்க இருப்பதாக விஷால் ஏற்கனவே அறிவித்துள்ளார்.. விஷாலின் இந்த போராட்ட முடிவுக்கு தியேட்டர் அதிபர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.. இந்த அறிவிப்புக்கு பயந்து சில தயாரிப்பாளர்கள் தனகளது பட ரிலீஸ் தேதிகளை மாற்றி வைத்து வருகின்றனர்..

இந்தநிலையில் அதிரடிக்கு பெயர்போன திருப்பூர் தியேட்டர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணி எக்காரணத்தைக்கொண்டும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள 169 தியேட்டர்கள் மூடப்படமாட்டது என அறிவித்துள்ள அவர், நடிகர்கள் சம்பளத்தை குறைத்தாலே எல்லா பிரச்சனைகளும் தானாக முடிவுக்கு வந்துவிடும் என கூறியுள்ளார்.

Leave a Response