
இயக்குநர் பாரதிராஜா, திரைப்படக்கல்லூரி தொடங்குகிறார். அது பற்றிய செய்திக்குறிப்பு…
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும், பல திரைப்படங்களை இயக்கி, தேசிய மற்றும் பல மாநில விருதுகளை வென்று தமிழ்த் திரையுலகில், தனக்கென தனி பாணியில் கதையுடன் எதார்த்த வாழ்வியலைப் புகுத்தி தன்னுடைய படைப்புகளினால் தமிழ்த்திரையுலகில் புதிய திசை ஏற்படுத்தியவர் இயக்குநர் பாரதிராஜா.
பாக்யராஜ், ராதிகா சரத்குமார், கார்த்திக், ராதா, ரேவதி, கவுண்டமனி, ஜனகராஜ், காஜல் அகர்வால், பிரியா மணி, நெப்போலியன், ரஞ்சிதா, மணிவண்ணன், மனோபாலா, நிர்மல் குமார், சித்ரா லக்ஷ்மணன் என்று இவரிடம் திரைத்துறையை கற்று வந்தவர்கள் பற்றிய எண்ணிக்கை ஏராளம்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை ஸ்ரீதேவி போன்றோரின் நடிப்பில் புதிய பரிமானத்தை கொண்டு வந்தவர் இயக்குநர் பாரதிராஜா என்று சொன்னால் மிகையாகாது.
திரைக்கலையின் தன்மையை மீண்டும் விரிவுப்படுத்தி அதன் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொடுக்க “பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்” எனும் புதிய திரைப்படக் கல்வி நிலையத்தை துவங்கவுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
நடிப்பு (Acting) ஒளிப்பதிவு (Cinematography) படத்தொகுப்பு (Editing & Compositing) இயக்கம் (Direction) ஒலிப்பதிவு (Sound Design)
சண்டைப்பயிற்சி (Stunt Direction) நடனம் (Choreography) கலை (Production Designer (Art))
ஆகிய கலைகளின் பயிற்சியினை மாணவர்களுக்கு அளிக்கவுள்ளது “பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்”.
இந்நிறுவனத்தின் கௌரவ ஆலேசகர்களாக திரு.முத்துக்குமார், துணை வேந்தர் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் ப்ரியதர்ஷன், இயக்குநர் ராஜீவ்மேனன் கவிஞர் வைரமுத்து, கங்கை அமரன், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய தலைமுறையின் முன்னோடிகளாய் விளங்கும் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் அனுபவத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து இளைய தலைமுறைக்கு திரைக்கலையை சிறந்த முறையில் பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் விரைவில் வருகிறது “பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்”.


