மும்மொழிகளில் தயாராகும் ஸ்ரீதேவி படம்..!


நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘புலி’ படங்களின் மூலமாக தனது நடிப்புக் கலையை தொடர்ந்த ஸ்ரீதேவி, தற்போது ‘மாம்’ (அம்மா) எனும் படத்தில் முன்னனி கதாபத்திரத்தில் நடிக்கின்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ரவி உதயவார் என்பவர் இயக்குகிறார்.

நடிகை ஸ்ரீதேவியுடன், அக்ஷய் கண்ணா, நவாஸுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் முதல் போஸ்டரை நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி இணையதளத்தில் வெளியிட்டனர்.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தப்படத்தை வரும் ஜூலை-14ம் தேதி Zee ஸ்டுடியோஸ் உலகமெங்கும் வெளியிடுகின்றது. ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பாளர் போனி கபூர் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.,

Leave a Response