யார் படத்தில் முதலில் நடிக்கவேண்டும்..? ; சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவுரை..!


எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், வேந்தர் மூவீஸ் மதன், ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா ஆகியோர் சிவகார்த்திகேயன் தங்களிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு படம் தர மறுப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தில் குற்றம் சாட்டியதாகவும், அவர்கள் தான் சிவகார்த்திகேயனி ‘ரெமோ’ படஹ்திற்கு எதிராக திரைமறைவு வேலைகள் செய்ததாகவும் சொல்லப்பட்டது..

அதில் மற்ற இரண்டு பேரிடம் அட்வான்ஸ் வாங்கவில்லை என மறுத்த சிவகார்த்திகேயன், ஸ்டுடியோகிரீன் நிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கியதை ஒப்புக்கொண்டு வரும் காலத்தில் ஞானவேல்ராஜாவுக்கு படம் பண்ணிக்கொடுக்க ஒப்புக்கொண்டார் என்றும் சொல்லப்பட்டு ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது..

பேச்சுவார்த்தையின் முடிவில் சிவகார்த்திகேயன் மோகன்ராஜா படத்தில் நடித்து முடித்தவுடன், ஞானவேல் ராஜா படத்தில் நடிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன் மற்றும் ‘வேந்தர் மூவிஸ்’ மதன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் எனவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response