
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கும்கி’ படத்தில் ஃபாரஸ்ட் ரேஞ்சராக நடித்தாரே.. அவர்தான் மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி.. அதன்பின் ‘எட்டுத்திக்கும் மதயானை’ மற்றும் விஷாலின் ‘கதகளி’ படத்தில் போலீஸ் ஆபிசர் என தமிழிலும் ஓரளவு கால்பதிக்க முயன்றார்.. இவர்தான் தற்போது பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக கைது செயப்பட்டுள்ளார். உண்மையில் என்னதான் நடந்தது…?
இரண்டு தினங்களுக்கு முன் ஸ்ரீஜித் ரவி ஓரிடத்தில் தனது காரில் கிட்டத்தட்ட முக்கால் நிர்வாண நிலையில் அமர்ந்திருந்தாராம். அப்போது அந்தப்பக்கமாக வந்த பள்ளி மாணவிகளிடம் தனது நிர்வாண உடலை வெளிப்படுத்திக்காட்டியதோடு, அவர்களையும் தன்னுடன் சேர்த்து செல்பி எடுக்க முயன்றாராம்.. இதனால் அலறியடித்துக்கொண்டு ஓடிய மாணவிகள், அவரது கார் நம்பரை குறித்துவைத்து, தங்களது பெற்றோருடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டாரர்களாம்.
இதுகுறித்து ஸ்ரீஜித் ரவியிடம் விசாரிக்க சென்ற போலீஸாரிடம், இதில் உண்மையில்லை, அந்த கார் எண் தன்னுடையதுதான் என்றாலும் தான் அவ்வாறு நடக்கவே இல்லை என சாதித்துள்ளார்.. அதன்பின் அந்த மாணவிகளை அடையாள அணிவகுப்பிற்கு தயார்படுத்திய போலீஸார், அதில் ஸ்ரீஜித் ரவியை பங்கேற்க வைத்துள்ளனர்.. மாணவிகளும் அவர்தான் என்பதை உறுதிப்படுத்தினார்கள். இதன்பின் சில விசாரணைகளுக்கு பிறகு, படப்பிடிப்பு தளம் ஒன்றில் இருந்த ஸ்ரீஜித் ரவியை போலீஸார் கைது செய்தனாராம்.


