மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்கிறார் உதயநிதி.!

 

மலையாளத்தில் இருந்து ஹிட்டான படங்களை தமிழுக்கு ஏற்றமாதிரி ரீமேக் செய்துவருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மலையாளத்தில் உள்ள கலாச்சார சூழலுக்கும் நம்ம ஊர் நிலவரத்துக்கும் ஏற்றமாதிரி ஒருசில படங்கள் மட்டுமே ரீமேக்கிற்கு செட்டாகும்.

மற்றபடி படம் சூப்பராக இருக்கிறதே என ரீமேக் பண்ணினால் சமீபத்திய ‘பெங்களூரு நாட்கள்’ வரை ரிசல்ட் பூஜ்யமான நிகழ்வுகள் பல உண்டு. ஆனாலும் நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளார் உதயநிதி. ஆம்.. ஏற்கனவே இந்திப்படமான ‘ஜாலி எல்எல்பி’ படத்தை தமிழில் ‘மனிதன்’ என்கிற பெயரில் ரீமேக் பண்ணி நடித்தார்.. ஓரளவு நல்ல பெயரும் அந்தப்படத்தால் கிடைத்தது..

அதை தொடர்ந்து இப்போது மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஹேப்பி வெட்டிங்’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை தனது ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்காக பேசிக்கொண்டு இருக்கிறாராம் உதயநிதி..

படத்தின் தமிழ் ரைட்ஸை தர ஒப்புக்கொண்ட அந்த மலையாள இயக்குனர், தமிழிலும் தானே தான் படத்தை இயக்குவேன் என கட் அன்ட் ரைட்டாக சொல்லிவிட்டாராம். நல்ல விஷயம் தானே.. அப்படி செய்தால் உதயநிதிக்கு லக் தான்.

 

 

Leave a Response