
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு,கள்ளக்குறிச்சி தவெக சமஉ அருள் விக்னேஷ் தகாத குறுச்செய்தி அனுப்பினார் என்கிற செய்தியால் பெரும் அதிர்வலைகள்.அந்த சட்டமன்ற உறுப்பினர் அதை மறுத்து பேட்டி கொடுத்துள்ளார்.தவெக அமைச்சர் நிர்மல்குமாரும் அதை மறுத்துள்ளார்.
இந்நிலையில்,மாவட்ட ஆட்சியர் பத்மஜா குறித்த பல்வேறு தகவல்கள் சமூகவலைதளங்களில் உலாவருகின்றன.
வழக்கறிஞரும் அரியலூர் மாவட்ட வ.களத்தூர் ஊராட்சியின் முன்னாள் தலைவருமான பெரியார் நேசன்,இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ள பதிவில்…..
யார் இந்த திருமிகு.பத்மஜா இ. ஆ. ப.?
பெரம்பலூர் மாவட்டம் வ. களத்தூர் கடைவீதி கழிவு நீர் கால்வாய் பிரச்சனையில்… சட்டத்தின்பால் நின்று அரசியல் கோமாளிகளை அலற வைத்தவர்தான் இந்த அம்மையார்!
கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த திருமிகு வெங்கடப் பிரியா அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து வ. களத்தூர் கடைவீதி கழிவு நீர் கால்வாய் பிரச்சனையை தீர்த்து வைத்ததில் இவரின் பங்கு அளப்பரியது.
மேற்படி அம்மாவிடம் நான் மணிக்கணக்கில் வாதாடி இருக்கிறேன்.. கோரிக்கை தொடர்பாக அணுகி இருக்கிறேன்.
அந்த கோரிக்கைகளை ஏற்று, வ. களத்தூர் கடைவீதி பகுதியில் இருந்து, இராயப்பா நகர் வரை நடந்தே சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தவர்.
அவ்வாறு செல்கையில் வழக்கம் போல இராயப்பா நகரைச் சேர்ந்த சில தறுதலைக் கூட்டம் இந்த அம்மாவை மிரட்டும் தோணியில், கூலிப் பெண்களை ஏவி விட்டு இவர் வாகனத்தை மறித்தும் அராஜகத்தில் ஈடுபடவே சற்றும் அமைதி குலையாமல் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
இறுதியாக இவர் தலமையிலேயே அனைத்து அமைதிப் பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றது.
அப்போது மேற்படி சாக்கடை தறுதலைகளைப் பற்றி புரிந்து கொண்டார்.
அவருக்கு சரிவர தமிழ் பேசத் தெரியாது அவர் நமது அண்டை மாநிலத்துக் காரராக இருக்கலாம் என்பதை நான் உணர்ந்து கொண்டு, அவரிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவேன்.
அப்போது அவர் எனக்கு நீங்கள் தமிழ் பேசினால் புரியும், ஆனால் என்னால் உங்கள் அளவிற்கு தமிழ் தெரியாது என்றும் கூறினார்.
அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த திருமிகு. வெங்கடப்பிரியா இ. ஆ. ப அவர்களின் உத்தரவின் பேரில் வ. களத்தூர் கடைவீதி கழிவுநீர் கால்வாய் பணிகள் தொடங்கும் போது, வழக்கம் போல இராயப்பா நகரைச் சேர்ந்த தறுதலைகள் சட்டத்தை மீறி பிரச்சனை செய்யவே…
அவர்களை விசாரணைக்கு அன்றே அழைத்தார்… விசாரணை அறையில் கதவுகள் பூட்டப் பட்டது. மேற்படி தறுதலைகள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 107 -ன் படி வழக்கு பதிந்து. உறுதி மொழி பத்திரத்தில் கையேழுத்திட வேணாடும், மறுத்தால் இப்போதே உங்களுக்கு ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்க உத்தரவிடுகிறேன் என உத்தரவை வாசிக்க,
மேற்படி தறுதலைகள் சிறைக்கு அஞ்சி, வேறு வழியின்றி கையெழுத்திட்டு பின்னங்கால் பிடறி அடிக்க ஓட வைத்தவர்தான் இந்த அம்மா
திருமிகு. பத்மஜா இ. ஆ. ப அவர்கள்.
தற்போது கள்ளக்குறிச்சி தறுதலை சட்ட மன்ற உறுப்பினர் அம்மா அவர்களிடம் சேட்டைகளை காட்டியுள்ளார்.
அந்த அம்மாவே தகக பாடம் புகட்டுவார் என எதிர்பார்கிறோம்.
வ. களத்தூர் மக்களின் சார்பில் என்றைக்கும் தங்களுக்கு நன்றியோடு துணை நிற்போம் அம்மா!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது ஆளுங்கட்சி தரப்பில் அவரிடம் சமரசம் பேசப்பட்டுவிட்டதாகவும் இனிமேல் அவர் இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கமாட்டார் என்றும் சொல்லப்படுகிறது.


