
சென்னை மாநகரை பெருவெள்ள ஆபத்தில் இருந்து காக்க,நிலத்தடி நீர்வளம் பெருக்க,பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி 1 கிமீ கட்டுமானம் தவிர்க்க “பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை வரையறைப்படுத்தி அறிவிக்கை” செய்யக்கோரி நேற்று பாமக தலைவர் அன்புமணி,பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும் தருமபுரி தொகுதி சமஉவுமான சவுமியா அன்புமணி ஆகியோர் துரைப்பாக்கத்தில் உள்ள துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி சாலையில் விழிப்புணர்வுப் பேரணி நடத்தி பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது,பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்? என்ற விவரங்கள் அடங்கிய துண்டு
பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
இந்த நிகழ்வில் அன்புமணி பேசியதாவது….
பள்ளிக்கரணை சதுப்புநிலம் தற்போதுவரை வரையறை படுத்தப்படவில்லை.இதுதான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று வரையறைபடுத்தி அறிவிக்கை செய்யவேண்டும்.அப்போதுதான் இந்த சதுப்புநிலம் பாதுகாக்கப்படும்.இந்தநிலம் 100 ஆண்டுகளுக்கு முன்பு 15 ஆயிரம் ஏக்கர் அளவில் இருந்தது.
தற்போது 2,500 ஏக்கர் மட்டும் தான் இருக்கிறது.அத்தனை இடங்களும் அடையாறு பெருங்குடி என்று வீடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.ஊழல் செய்வதற்காகத்தான் 2 திராவிடக் கட்சிகளும் இவ்வளவு ஆண்டுகளாக சதுப்புநிலத்தைப் பாதுகாக்கவில்லை.தமிழகத்தில் 20 இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில்,இந்த இடம்தான் மிகவும் பெரியது.அதுவும் சென்னையில் உள்ளது.பசுமைத் தீர்ப்பாயம்
ஆணையில்,சதுப்புநிலத்துக்கு ஒரு கிமீ சுற்றிலும் எந்தக் கட்டுமானமும் செய்யக்கூடாது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பூர்வகுடிமக்கள் வீடுகட்ட முடியாமல்
அவதிப்படுகின்றனர்.
தமிழக அரசு எது சதுப்பு நிலம்? எதுவரை இந்த நிலம் இருக்கிறது? என்பதை அடையாளம் கண்டு அதை
அறிவிக்கையாக வெளியிடவேண்டும்.இளையதலைமுறையில் ஏதேதோ விசயங்களுக்காக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுகிறீர்கள்.பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைப் பாதுகாக்க விழிப்புணர்வு ரீல்ஸ் போடுங்கள்.
தமிழக சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டாராக சவுமியா அன்புமணி இருக்கிறார்.சென்னைக்குக் கண்டிப்பாக 2 ஆவது விமானநிலையம் வேண்டும்.
ஆனால்,அதை எங்கே கொண்டு வருவது என்பதுதான் பிரச்சினையாக உள்ளது.பரந்தூரில் விவசாய நிலங்கள்
அழிக்கப்படக்கூடாது.தமிழக அரசு ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள்.அதை நாங்கள் வரவேற்கிறோம்.
அதேபோல்,செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தக்கூடாது.பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த திட்டத்துக்குத்தான் பயன்படுத்த வேண்டும்.
அங்கு மிகப்பெரிய நீர்த்தேக்கத்தை உருவாக்கவேண்டும்.அதைமீறி வேறு ஏதாவது திட்டத்திற்குப் பயன்படுத்தினால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சவுமியா அன்புமணி பேசுகையில்…
தமிழக அரசு பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தை அறிவிக்கை செய்யவேண்டும்.பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைப் பாதுகாக்க சேட்டிலைட் மூலமாக அளவீடு செய்யவேண்டும்.வேடந்தாங்கல் சரணாலயம் போல், பள்ளிக்கரணையில் பறவைகள் சரணாலயம் இருக்கிறது.
இந்தப் பறவைகளையும், இந்த இயற்கையையும் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லவேண்டும்.இந்த
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை நாம் பாதுகாக்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்
இவ்வாறு அவர் பேசினார்.


