
அதிமுகவைச் சேர்ந்த பலர் அக்கட்சியிலிருந்து விலகி ஆளும்கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.இது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,ஈரோட்டில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசுகையில்….
கூடிய விரைவில் தவெக அரசு போக (கவிழ) வாய்ப்புள்ளது.முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தங்கள் தவறை மறைக்கவும்,சொத்தைக் காப்பாற்றவும்,வழக்கில் இருந்து தப்பிக்கவும் தவெக.வுக்குச் செல்கின்றனர். அதிமுக, திமுக கூட்டணி பேசியது தொடர்பாக பலரும் பேசுகிறார்கள்.அதிமுக-திமுக கூட்டணி முயற்சித்ததை நிரூபிக்க முடியுமா?
அதிமுகவுக்கு யாரு வந்தாலும் சேர்ப்போம்,ஒன்றிணைவோம்.டிடிவி மற்றும் சசிகலா இணைவார்களா? என்ற கேட்கிறீர்கள்,பொறுத்திருந்து பாருங்கள்.டிடிவி-சசிகலா அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்புள்ளது.தவெக குதிரை பேரத்தில் ஈடுபடாமல் எப்படி அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தவுடன் தவெகவில் இணைந்தார்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு,அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் அதிமுகவில் இணைவார்கள் என்று பதிலளித்தார்.
அண்மையில் தஞ்சை மாவட்ட அதிமுகவினர் ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி.தினகரனைக் கட்சியில் சேர்க்கவேண்டும் என்று தொண்டர்கள் பேசியிருந்தார்கள்.இப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன்,சசிகலா,டிடிவி ஆகியோர் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது எனக்கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


