
ஜூலை 3 அன்று வெளியான திரைப்படம் கட்டாகுஸ்தி 2.இந்தப்படத்தின் விளம்பர நிகழ்வில்,இப்படத்தின் நாயகன் நடிகர் விஷ்ணு விஷால் பேசும்போது விஜய் என குறிப்பிட்டார்.உடனே அவரது இரசிகர்கள்,முதல்வர் விஜய் எனக் குறிப்பிடாமல் விஜய் என்று சொல்வதா? என விஷ்ணு விஷாலை தரக்குறைவான வார்த்தைகளால் வசைபாடினர்.
இந்தச் சிக்கலை ரூட் நிறுவனம் கையிலெடுத்து,விஷ்ணு விஷாலை குறிவைத்துத் தாக்க ஆரம்பித்தனர். இ்நநிலையில்தான் கடந்தவாரம் கட்டா குஸ்தி 2 படம் வெளியானது.
இந்தப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.ரூ.15 கோடியில் உருவான இந்தப்படம்,3 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் குவித்துள்ளது.
இதற்கிடையே இந்தப்படம் வெளியான நாளிலிருந்து,படம் குறித்து எதிர்மறை விமர்சனங்களை ரூட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக,திரைப்படங்களில் நடித்தபோது,மற்ற கதாநாயகர்களின் படங்களை தரக்குறைவாக விமர்சித்து அந்தப் படங்களை காலி செய்யும் வேலையை ரூட் நிறுவனம் மேற்கொண்டு வந்தது.இது விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் நடத்தும் நிறுவனமாகும்.இதனால் தமிழ்த்திரையுலகில் இந்த நிறுவனத்துக்கு ரூட் மாஃபியா என்ற அடைமொழி இருக்கிறது.அவர்கள் மற்ற கதாநாயகர்களின் நன்மதிப்பைச் சரிவடைய செய்வதிலேயே குறியாக இருப்பார்கள்.இப்போது விஷ்ணுவிஷாலுக்கு அதைச் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், விஷ்ணு விஷால் கலந்துகொண்ட நிகழ்வில்,இந்தப்படத்துக்கு விஜய் இரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்களை அளித்து வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.அவர் கூறும்போது,தவெகவைச் சேர்ந்தவர்கள் எதிர்மறையான விமர்சனங்களைப் பரப்பி வருகிறார்கள்.அதை நான் பார்த்தேன்.கஷ்டமாக இருந்தது.அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை.இதை அரசியலாக மாற்ற விரும்பவில்லை.கட்டா குஸ்தி 2 மக்களுக்குப் பிடித்துள்ளது.
ஆன்லைன் சோசியல் மீடியாவில் இருக்கும் இந்த வன்மம் குறித்து நான் முன்பே பேசிவிட்டேன்.இப்போதும் அந்தக் கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.ஆன்லைன் வன்மம் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.அதற்கு எதிராக நான் குரல் கொடுத்துள்ளேன்.ஆன்லைன் வன்மம் நல்லதில்லை.நான் கூறிய கருத்தில் எப்போதும் உறுதியாக இருப்பேன்.ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது சரியில்லை.சமூகம் மாறவேண்டும் என நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் சமூக வலைதளங்களில் வேறு மாதிரியான விசயங்கள் நடந்து வருகிறது.ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை நான் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனமாகத்தான் பார்க்கிறேன்.
2013 ஆம் ஆண்டிலிருந்து அவர்களுடன் எனக்குப் பழக்கம்.அவர்களுக்கும் எனக்கும் சமமான உறவு உள்ளது. அதனால் இந்தப்படத்தை அவர்களை வைத்து ரிலீஸ் செய்தேன்.எனக்கு ஆதரவாக இருந்தவர்களுடன் இணைந்து படத்தை வெளியிட்டேன்.இதிலும் அரசியல் செய்கிறார்கள்.இந்த அரசியல் வேண்டாம்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ரூட் நிறுவனம் மூலம் விஜய் இரசிகர்கள் இந்தப்படத்துக்கு எதிர்மறையாகப் பேசிக்கொண்டிருந்ததையும் மீறி இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது.வெள்ளி,சனி,ஞாயிறு மட்டுமின்றி திங்கள்,செவ்வாய் ஆகிய நாட்களில் நல்ல வசூல் செய்துவருவதாகச் சொல்கிறார்கள்.


