
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்தார்.
அதன்படி, திருத்துறைப்பூண்டியில் க.மாரிமுத்து, தளி தொகுதியில் டி.ராமச்சந்திரன், பவானிசாகரில்
பி.எல்.சுந்தரம், திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவி (எ) எம். சுப்பிரமணியம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பி.மகாலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கதிர்அரிவாள் சின்னத்தில் இவர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் டி.ராமச்சந்திரன் மற்றும் க.மாரிமுத்து ஆகியோர் ஏற்கெனவே தளி மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
ரவிக்கும், பி.எல்.சுந்தரத்துக்கும் கடந்தமுறை போட்டியிட்ட அதேதொகுதிகளில் மீண்டும்
வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் அறிவிப்புக்கு பின் செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறுகையில்…
திமுகவிடம் நாங்கள் கேட்ட 5 தொகுதிகள் கிடைக்கபெற்ற நிலையில், மாநிலக் குழு, மாவட்டக் குழுக்
கூட்டங்களைக் கூட்டி வேட்பாளர்களைத் தேர்வு செய்து ஒருமனதாக அறிவித்துள்ளோம்.
இவர்கள் ஐவரும் கட்சியின் மாணவர் அமைப்பு,இளைஞர் அமைப்புகளில் பணிபுரிந்தவர்கள். இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் ஐந்து தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றிபெறுவோம் இவ்வாறு அவர் கூறினார்.
