
தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.2025 டிசம்பர் 27 ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.1
இலட்சத்து 4 ஆயிரத்து 800-ஆக உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. பின்னர் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவின. கடந்த 13 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.1 இலட்சத்து 5 ஆயிரத்து 360-ஆகவும், 14 ஆம் தேதி ரூ.1 இலட்சத்து 6 ஆயிரத்து 240 ஆகவும் அடுத்தடுத்து உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தைப் பதிவு செய்துஉள்ளது.
இதையடுத்து, மீண்டும் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்தது. நேற்று முன்தினம் ரூ.1 ஒலட்சத்து 7 ஆயிரத்து 600-ஆக உயர்ந்துபுதிய உச்சத்தைத் தொட்டது.
இதன் தொடர்ச்சியாக, ஆபரணத் தங்கம் நேற்றும் வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,600 உயர்ந்து, ரூ.1 இலட்சத்து 11 ஆயிரத்து 200-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.450 உயர்ந்து ரூ.13,900-க்கு விற்பனையானது.
தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும்ர மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார்.
அவர் தனது சமூகவலைதளப் பதிவில்…
ஊழல் நிறைந்த பாஜகவின் புதிய பொருளாதாரக் கொள்கை ஊழலைத் திடப்படுத்துதல், ஊழல் வழிகளில் சம்பாதித்த பணத்தை விலை மதிப்பற்ற உலோகங்களாக மாற்றுவதாகும். ஊழலைத் திடப்படுத்துவது என்பது பாஜக ஆட்சியின் கீழ் ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையாகும். இதனால் தங்கம், வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்குக் கடுமையான சமூக விளைவுகள் இருப்பதாகவும், இது வீடுகள், சுற்றுப்புறங்கள், கடைகள் மற்றும் சந்தைகளில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இதற்கு கூடுதல் பாதுகாப்புப் படைகள் தேவைப்படும்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


