கனடா தேர்தலில் ஈழத்தமிழர் வெற்றி.

கனடா  நாடாளுமன்றத்தின் 338 எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் கான்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியை தழுவியுள்ளது. இதேவேளை 175 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது லிபரல் கட்சி .

இதில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் லிபரல் கட்சியில் கனேடிய குடியுரிமை பெற்ற ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  ஈழத்தமிழர்களின் வாக்கு இவரது வெற்றியில் கணிசமான பங்கு ஆற்றியிருப்பதாக அறியப்படுகிறது.

மூன்றாம் தரப்பான , இடது சார்பு புதிய ஜனநாயகக் கட்சி (என்.டி.பி) திரு தோமசும் சிறுபான்மை அரசு அமையுமிடத்து கூட்டணி அமைப்பதற்கு ஆதரவளிக்க வேண்டிய நிலைமை தற்போது தேவையற்றுப்போய் விட்டது. ராதிகா சிற்சபேசன் இந்தக்கட்சியிலேயே போடியிட்டு கடந்தமுறை தேர்தலில் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. இம்முறை லிபரல் கட்சியே பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிப்பதால் ஆட்சி அமைக்க உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட்ட 6 ஈழத் தமிழ் வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.

இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பல முக்கிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர். இத்தேர்தலில் 6 ஈழத் தமிழர்கள் போட்டியிட்டனர். இதில் லிபரல் கட்சி சார்பாக ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் ஹரி ஆனந்தசங்கரி மட்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியான ராதிகா சிற்சபை ஈசன் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளார். இதேபோல் சாந்திக்குமார், செந்தி செல்லையா, ரோஷான் நல்லரத்தினம், கார்த்திகா கோபிநாத் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

Leave a Response