சேனல் 4 தொலைக்காட்சி காட்டிய அனைத்தும் உண்மை- ராஜபக்சே தண்டிக்கப்படுவாரா?

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைப் போர் குறித்து சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட சான்றுகள் உலகை உலுக்கின. அதனால்  கடும் எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்கள் வந்தன இவற்றிலிருந்து தப்புவதற்காக ,முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமா அக்குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்தக் குழுவானது இலங்கை நாடாளுமன்றத்தில் அக்டோபர் 20 அன்று (செவ்வாய்கிழமை) தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. 178 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..

  • இறுதிகட்டப் போரின்போது இலங்கைப்படைகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மையே.
  • ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் பரிந்துரைக்கேற்ப போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை ஈடுபடுத்த வேண்டும்.
  •  இலங்கை நீதித்துறையில் போர்க்குற்றம் தொடர்பான வழக்குகளை கையாள சிறப்புப் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
  •  சேனல் 4 தொலைக்காட்சியில் தமிழர்கள் கொல்லப்படுவதுபோல் வெளியான காட்சிகள் அத்தனையும் உண்மையே.
  • இறுதிகட்ட போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். இது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவற்றோடு இனப்படுகொலை குறித்தும் கருத்துகளை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை, சிங்கள இனத்தைப் பாதுகாக்கும் வண்ணம் அமைந்துள்ளதோடு ராஜபக்சேவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அவர் தண்டிக்கப்படுவார் என்றும் சொல்கிறார்கள்.

 

Leave a Response