49 நாட்களாக உயராத பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது தமிழக அரசு – மக்கள் அதிர்ச்சி

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வருவாய் இழப்பை ஈடுகட்ட பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியில் மாற்றம் செய்துள்ள தமிழக அரசு, பெட்ரோலுக்கு லிட்டருக்கு 3.25, டீசல் லிட்டருக்கு 2.50 உயர்த்தியுள்ளது.

இதனால், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 3.25 உயர்ந்து 75.53ம், டீசல் 2.50 உயர்ந்து 68.21ஆகவும் விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு இன்று அமலுக்கு வருகிறது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று எதிர்பார்த்த அளவில் கட்டுக்குள் வராத நிலையில் தற்போது அந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நெருக்கடிக் காலத்தில் அரசின் வருவாயைச் சரிகட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப் படி, ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணம் பெறுவதற்கு தமிழக அரசு தடை விதித்தது.

வரி வருவாயைப் பெருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட் வரி) நேற்று உயர்த்தியது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 3.25, டீசல் லிட்டருக்கு 2.50 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், கடந்த 49 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடிக்கிறது. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 72.28ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ₹65.71ஆகவும் இருந்தது. தற்போது வாட் வரியால் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 3.25 உயர்ந்து 75.53ம், டீசல் 2.50 உயர்ந்து 68.21ஆகவும் உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 20 டாலருக்கும் கீழ் சரிந்து விட்டது. இதன்படி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசு வரியை உயர்த்தியுள்ளது.

Leave a Response