காலா பட விநியோக அலுவலகம் சூறை – கன்னட அமைப்பு அட்டகாசம்

நாளை வெளியாகவிருக்கும் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. பல்வேறு கன்னட அமைப்புகள் ‘காலா’ படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

‘காலா’ வெளியாகும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடகா உயர்நீதி மன்றம் நேற்று மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

கர்நாடகாவில் ‘காலா’ படம் சுமார் 130 திரையரங்குகளில் வெளியாகும் என கர்நாடகா வினியோகஸ்தர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இன்று காலை கன்னட அமைப்பைச்சேர்ந்த சிலர் பெங்களூருவில் உள்ள ‘காலா’ வினியோகஸ்தர் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த ‘காலா’ போஸ்டர்களை கிழித்துப் போட்டதோடு, அலுவலகத்தையும் சூறையாடினர்.

கர்நாடகா உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னரும் மாநில அரசு உரிய பாதுகாப்பு வழங்காமல் இருப்பது தமிழ்த் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் மேல் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.

Leave a Response