காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழர் ஒத்துழையாமை_இயக்கம் நடத்துவதென்றும் அதையொட்டி,
1.மத்திய அரசு அலுவலகங்கள் தொடர் முற்றுகை
2.வரி கொடாமை
3.சுங்கச்சாவடி முற்றுகை
4.தொடர்வண்டி மறியல்
ஆகியனவற்றைச் செய்யவேண்டும் என்று நாம்தமிழர்கட்சி அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட நாம்தமிழர்கட்சி இளைஞர் பாசறை சார்பாக, கர்நாடக எல்லை முற்றுகைப் போராட்டம் இன்று காலை பத்து மணியளவில் நடந்தது.
சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முதல் பண்ணாரி சோதனைச் சாவடி வரை பேரணியாகச் சென்று பண்ணாரி சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு சுமார் 20நிமிடங்கள் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்தில், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுச்செல்வன், துரைமுருகன், சமுத்திரம் யுவராசு தலைமை தாங்கினர். மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் விசய்வின்சென்ட் முன்னிலை வகித்தார். ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் அ.தமிழ்ச்செல்வன் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சத்தியில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இப்போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பொறுப்பாளர்களிடமும் தொடர்பு கொண்ட காவல்துறையினர், முற்றுகையின் போது என்ன செய்யப்போகிறீர்கள்? என்று விசாரித்துக்கொண்டே இருந்தனராம்.
எல்லாக்கட்சிகளும் போராடினாலும் நாம்தமிழர்கட்சி போராட்டம் அறிவித்தால் மட்டுமே காவல்துறையினர் பதறுகின்றனர் என்று சொல்கிறார்கள்.


