
தற்போது டிக் டிக் படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி, அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க தயாராகி வந்தார். ஆர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பை தற்போது வரும் ஏப்ரலுக்கு தள்ளிவைத்திருக்கிறார்கள்.
ஆகையால் ‘சங்கமித்ரா’வுக்கு முன்னதாக புதுமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் கூறிய கதை பிடித்துவிடவே ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழ் திரையுலகில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தைத் தொடர்ந்து அவர் ஒப்பந்தமாகியுள்ள படம் இதுவாகும்.
இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடித்து, இயக்குநர் அஹ்மத்தின் படத்தையும் முடித்துவிட்டுதான் ‘சங்கமித்ரா’வில் கவனம் செலுத்தவுள்ளாராம் ஜெயம் ரவி.


