
மலையாள சினிமாவில் முன்னணி நடிராக வலம் வருபவர் நடிகர் பஹத் பாசில். இவர் முதன் முறையாக தமிழில் ‘வேலைக்காரன்’ படத்தில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தை மோகன்ராஜா இயக்கி வருகிறார். படத்தின் ஹீரோவாக சிவகார்த்திகேயன், ஹீரோயினியாக நயன்தாரா நடிக்கிறார்கள். இவர்களுடன் பஹத் பாசிலும் நடிக்கிறார்.
இதன்மூலம் தமிழிலும் அழுத்தமாக கால் பதிக்க நினைக்கிறாராம் பஹத் பாசில். ஆனால் முதல் படத்திலேயே வில்லனாக நடிப்பதால் அவரை தேடி வரும் அடுத்தடுத்த தமிழ் படங்களும் வில்லன் கேரக்டராகவே அமைகிறதாம்.
ஆனால் அவருக்கு வில்லன் வேடத்தில் நடிக்க விருப்பம் இல்லையாம். மலையாளத்தில் ஹீரோவாக நடித்துவிட்டு தமிழில் எப்படி வில்லனாக நடிக்க முடியும் என தயங்குகிறாராம். அதுவும் முதல் படம் என்பதால் தான் சம்மதித்தாராம். ஆகவே வில்லன் கதைகளோடு வருகிறவர்களை திருப்பி அனுப்பிவிடுகிறாராம்.


