
இந்தியாவின் முன்னணி தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள் உறுப்பினர்களாக உள்ள பலம் வாய்ந்த வணிக அமைப்பான ஃபிக்கி சார்பில் 2015 ஆம் ஆண்டுக்கான திரைப்படத் துறை ஆண்டுவிழாக் கூட்டம் மும்பையில் மார்ச் 25 புதன்கிழமை தொடங்கியது. இதன் தொடக்கவிழாவில் இந்திநடிகர் அமீர் கான் கலந்துகொண்டார்.

திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கப்பெறும் பட்சத்தில், அந்தப் படத்தை எந்தவித அச்சமுமின்றி ரசிகர்கள் கண்டுகளிக்க வழிவகை செய்வது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பொறுப்பாகும்.
ஒரு திரைப்படம் சிலருக்குப் பிடிக்கலாம். சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். அது ரசிகர்களுடைய தனிப்பட்ட உரிமை. ஆனால் அந்தப் படத்தை திரையிடத் தடை விதிப்பது சரியல்ல.
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து திரைத்துறையினர் ஒன்றாக இணைந்து போராடியபோது, என்னால் அதில் பங்கேற்க இயலவில்லை. அதற்காக நடிகர் கமலஹாசனிடம் நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அமீர் கான்.
