
மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் சவுகார்பேட்டை. இப்படத்தின் தொடக்கவிழா மார்ச் 24 அன்று சென்னை பிரசாத் திரையரங்கில் நடந்தது.
இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக லஷ்மிராய் நடிக்கிறார். மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், சம்பத், கோவைசரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை ஜான்பீட்டர், ஒளிப்பதிவு சீனிவாசரெட்டி,
பாடல்கள் நா.முத்துக்குமார், விவேகா
வசனம் ஷாம்மேனன் எழுத
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் V.C.வடிவுடையான்.
தம்பிவெட்டோத்திசுந்தரம் என்ற படத்தை இயக்கிய இவர், விரைவில் வெளியாக உள்ள “ கன்னியும் காளையும் செம்ம காதல் படத்தையும் இயக்கி உள்ளார்.
சென்னையில் உள்ள சவுகார்பேட்டை மக்கள்நடமாட்டம் அதிகமுள்ள இடம் மட்டுமல்ல.பணம் அதிகளவில் புழங்கும் இடமும் கூட. அப்படிப்பட்ட சவுகார்பேட்டையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கதை !
காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், திகில், ஹாரர் எல்லாமும் இருக்கும் கமர்ஷியல் படம் என்கிறார் இயக்குனர்.
ஆர்யாவுக்கு நான்கடவுள் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது போல இந்தப்படம் ஸ்ரீகாந்துக்குப் பெரும் திருப்புமுனையாக அமையும் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள்.


