காயத்ரிக்குக் கட்டுப்பட்டு நடக்க விரும்புகிறாரா புதுவரவு சுஜா?

பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டுக்குள் புதிதாக வந்திருக்கும் நடிகை சுஜா வருணி வந்தவுடனேயே அதிகமான தன்னம்பிக்கையுடன் மிகையாக எல்லோரையும் பார்த்து சிரித்து வைத்தார்.

திரைப்படங்களில் ஒரு பாடல் நடனக்காட்சிகளில் ஆடுபவர் என்பதால் காயத்ரி நடன இயக்குநர் என்ற அடிப்படையில் குரு வணக்கம் வைத்தார். சுஜாவின் தேர்வு காயத்ரிக்கு சார்பாக சென்று முடியவேண்டும் என்பது பிக்பாஸின் திட்டமாக இருக்கலாம்.

சக்தி –காயத்ரி கூட்டணியின் மூலம் பிக்பாஸிற்கு வெளியில் கிடைக்கப் போகும் ஆதாயங்களை நினைத்துத்தான் ஜூலி, ஆரவ் போன்றோர் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள்.கூடுதலாக இப்போது சுஜாவும் சேர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

சுஜாவும் காயத்ரிக்கு ஆதரவாக இருப்பது நல்லது என்றுதான் யோசிப்பார். ஒரு நடன இயக்குநராக அவர் எப்படியெல்லாம் நடந்து கொள்வார் என்று அவருக்குத் தெரியும். அது மட்டுமல்லாமல் இத்தனை நாள் நிகழ்ச்சியில் காயத்ரியின் செல்வாக்கையெல்லாம் பார்த்தே வந்திருப்பார்.

காயத்ரிக்கும் சுஜாவை வளைக்கவேண்டும் என்று தெரிந்திருக்கிறது. எனவேதான் சுஜா வந்து நுழைந்த அடுத்த நிமிடமே அவரைப் பற்றி சிநேகனிடம் பேசத் துவங்கி விட்டார். “அவ பத்து ஜூலிக்கு சமம்’. என்று சொன்னது மட்டுமல்லாமல், ஆரவ்விடம் ‘நீ அங்க போகாத. அக்கா கிட்டயே இரு’ என்றும் சொல்லி ஆரவ்விற்கு சுஜா மீது ஒரு கவனத்தை ஏற்படுத்தினார். பார்க்கலாம் என்ன நடக்கப்போகிறதென்று?

Leave a Response