
கர்நாடக மாநிலத்தில் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் இந்தி இடம் பெற்றிருப்பதற்கு அம்மாநில மக்கள் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். முதலில் மெட்ரோ ரயில் நிலைய பெயர்ப்பலகை களில் இந்தி எழுத்துகளின்மீது தார் பூசி அழித்தார்கள். அதன் பின்னர் மத்திய அரசின் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் கடந்த ஆண்டிலேயே அதற்கான சுற்ற றிக்கையை அனுப்பியதை வெளிப் படுத்தி போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார்கள்.
போராட்டக்குழுவினர் ஒருங்கிணைந்து, இந்தி பேசாத மாநிலங்களின் பிரநிதிகளுக்கு கடிதங்கள் எழுதியும், நேரில் சந்தித்தும் இந்தி மொழியைத் திணிக்கின்ற மத்திய அரசுக்கு எதிரான மொழிப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கோரினார்கள்.
தமிழ்நாடு, புதுவை, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, மகாராட்டிரம், கேரளா, அசாம், ஒடிசா மற்றும் இந்தி பேசாத வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் ஆதரவுடன் அம்மாநிலங்களின் பிரதிநிதிகளைக்கொண்டு, வட்ட மேசை மாநாடு கூட்டி இந்தி மொழித் திணிப்பைக் கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
கர்நாடக மாநில முதலமைச்சர் இந்தி மொழித் திணிப்பைக் கண்டித்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.உணர்வுப்பூர்வமான விவகாரத்தில் இந்தித் திணிப்பில் ஈடுபட வேண்டாம் என மத்திய அரசுக்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இன்று, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தியில் இருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன என்று செய்தி வந்திருக்கிறது.


