பிக்பாஸை தமிழ் ராக்கர்ஸ்ல பார்க்க வச்சிடாதீங்க – ஓவியா ரசிகர்கள் கோபம்

பிக்பாஸ்இன்று

ஓவியா என்ன தான் ஸ்ட்ராங்கான பெண்ணா காட்டிக்கிட்டாலும், நல்ல இளகிய மனது. யாராவது கொஞ்சம் பாசமாப் பேசினால்கூட கண் கலங்கிடுது. இதை வச்சு விஜய் டிவிகாரன் ஒருவாரமா அழவச்சுப் பார்க்கிறான்.

ஓவியாவை இவ்வளவு பேர் விரும்பக்காரணமே, இதுவரை அவர் காட்டிய அட்டிடியூட் தான். நாம் எப்படி வாழ நினைக்கிறோமோ, அதை ஓவியா வாழ்ந்து காட்டியது தான். காயூவைக் காப்பாத்தணும் அல்லது ட்விஸ்ட் தரணும்னு ஓவியா கேரக்டரை சிதைச்சாங்கன்னா, நமக்கு ஒன்னும் நஷ்டமில்லை. தமிழ்ராக்கர்ஸ்ல அத்தனை எபிசோடையும் போட்டு வச்சிருக்கான். அதையே திரும்பத் திரும்பப் பார்த்துக்க வேண்டியது தான்; பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய கும்பிடு போட்றலாம்.

ஏற்கனவே ஏகப்பட்ட நேரம் வேஸ்ட் ஆனாலும், தலைவியின் பொன்மொழிகளுக்காகத் தான் ப்ரோக்ராம் பார்க்கிறோம். ஆரவ்வை பொன்மொழி பேசவிடுறது, காயூவை குழந்தைன்னு ப்ரூஃப் பண்றதுன்னு நிகழ்ச்சி போச்சுன்னா, இது தான் சாக்குன்னு பிக்பாஸ் பார்க்கிறதை நிறுத்திடலாம்!

ஜூலிக்கு வெறியேத்திக்கிட்டு இருக்காங்க. இந்த வாரம் எவிக்சன் வேற கிடையாது. அப்போ இன்னும் ரெண்டு வாரத்தில ஜூலி சந்திரமுகியா மாறுவதைப் பார்க்கலாம்!

வையாபுரி அண்ணனுக்கு சிநேகன் சொன்ன கவிதை அருமை. ஓவியா சொன்னதும், வையாபுரி கேமிராவைப் பார்த்து அண்ணிக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது, சிநேகனின் கவிதையை விட அழகாக இருந்தது.

ஆரவ் ஏற்கனவே ஒரு கேர்ள் ஃப்ரண்ட் வெளில இருக்குன்னு காயூகிட்டே சொன்னான். இப்போவரைக்கும் அதை ஓவியாகிட்டே சொல்லலை. ஓவியா வேற கற்பனையை வளர்த்துக்கிட்டே போகுது. ஜூலி ஏமாத்துனதையே தாங்க முடியாத மனசுடா அது…அதை நினைச்சால் தான் பக்குன்னு இருக்கு!

Leave a Response