மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி சொன்ன பொய்- சான்றுடன் அம்பலம்


“எனக்கு 7 மொழிகள் தெரிந்தாலும் இந்தி மொழி தான் இந்தியாவிலேயே சிறந்தது என்பேன். அந்த மொழி இந்தியாவின் தேசிய மொழி என்பதில் மிகவும் பெருமையடைகிறேன்” என்று சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசி இருக்கிறார்.
உங்களுக்கு சிறந்த மொழியாக இந்தி இருந்துவிட்டு போகட்டும்..அதைப் பற்றி கவலையில்லை.. ஆனால் “இந்தி இந்தியாவின் தேசிய மொழி ” என்று இந்தியாவின் அமைச்சராக இருந்துகொண்டு எப்படி இப்படியான தவறான தகவல்களை தரலாம். இந்தியாவிற்கென்று எந்த மொழியும் தேசிய மொழி அல்ல..அலுவல் மொழிகள்தான். அதுவும் நமது ரூபாய் நோட்டில் அச்சிடப்படிருக்கும் அனைத்து மொழிகளுமே அலுவல் மொழிகள் தான்.
இந்தி, தேசிய மொழி என்பவர்களுக்கு 2009ம் ஆண்டு குஜராத் உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பு
“இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல. இந்தியாவின் பெரும்பாலான மக்களால் இந்தி மொழி பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழி என்று வாதிடுவதை ஏற்க முடியாது.இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தி மொழியை ஆட்சி மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. அவ்வாறு எந்த அறிவிப்பும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.எனவே இந்தி என்பது ஆட்சி மொழி மட்டுமே தவிர; அது தேசிய மொழி அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
இத்தனைக்கும் பிறகும் பொய்யையும் புரட்டையும் பரப்பும் இவர்களை என்ன செய்வது ?
-சீனிவாசன்

Leave a Response