மோகன்ராஜாவின் முதல் என்ட்ரிக்கும் சினேகாவின் ரீ என்ட்ரிக்குமான ஆச்சர்ய தொடர்பு


சினேகா நடிக்க வந்து சுமார் 17 வருடங்களா ஆகிவிட்டது.. சில வருடங்களுக்கு முன் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டு நடிப்பை விட்டு கொஞ்சம் ஒதுங்கியவர் தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் மிக முக்கியமான படத்தில் நடிப்பதன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்..

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் மோகன்ராஜாவின் முதல் படமாக தெலுங்கில் அவர் இயக்கிய ‘அனுமான் ஜங்சன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் சினேகா.. இப்போது சுமார் 16 வருடங்கள் கழித்து அவரது ரீ என்ட்ரியும் மோகன்ராஜா படத்திலேயே நிகழ்வது ஆச்சர்யமான விஷயம் தான்.

Leave a Response