
கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பிடம் சில தினங்களுக்கு முன் போலீஸார் விசாரணை நடத்தினர்.. இந்தநிலையில் அவர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு கொச்சியில் உள்ள அலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் மலையாள நடிகர் திலீப் கேரள நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் அவர் மீதான புகார் ஊர்ஜிதமாகாமல் இருந்ததால் நடிகர்சங்கத்தினர் அவரைப்பற்றி பட்டும் படாமல் பேசிவந்தனர்.. தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் பொறுப்பு வகிக்கும் அனைத்து சங்கங்களில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.


