
மே 25-ம் தேதி கார்த்தி தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். மேலும் தமிழ் திரையுலகில் நடிகனான அறிமுகமாகியும் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு கார்த்தி மக்கள் நல மன்ற நிர்வாகிகள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கார்த்தியுடன் குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராஜுமுருகனும் கலந்துகொண்டார்.
கார்த்தி பற்றி ராஜூ முருகன் பேசும்போது, “மக்களுக்கு பிடித்ததை மட்டுமே செய்பவன் தலைவன் இல்லை. மக்களுக்கு தேவையானதை செய்பவனே தலைவன். இந்த மேடை மிக முக்கியமான மேடையாகும். என்னை பொறுத்தவரை கார்த்தி ஏற்கெனவே அரசியலில் உள்ளார். தேர்தலில் போட்டியிடுவது மட்டும் அரசியல் இல்லை. மக்களுக்காக யாரெல்லாம் உதவுகிறார்களோ அவர்கள் எல்லாம் அரசியலில் இருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்” என்று பேசினார்.


